

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதா மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சித்திரை 1-ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ்க்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது, அதற்கான கால வரம்பில் அந்தந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது பிரதமரே தொடங்கி வைத்த திட்டம் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எய்ம்ஸ் வரும், தமிழக மக்கள் அனைவரும் எய்ம்ஸில் சிறப்பான சிகிச்சை எடுக்கப் போகிறோம்" எனத் தெரிவித்தார்.