Published : 12 Jan 2022 06:12 AM
Last Updated : 12 Jan 2022 06:12 AM

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ - தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டார்

`இந்து தமிழ் இயர்புக் – 2022’ முதல் பிரதியை தமிழ்நாடு காவல் துறை டிஜிபி. சி.சைலேந்திர பாபு ஐபிஎஸ்., அவருடைய அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். அருகில் ‘இந்து தமிழ் திசை’ வர்த்தகப் பிரிவுத் தலைவர் சங்கர் வி.சுப்ரமணியம், இணைப்பிதழ் பிரிவு பொறுப்பாசிரியர் ஆதி. வள்ளியப்பன் ஆகியோர் உள்ளனர்.படம்: ம. பிரபு

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் இயர்புக் வெளியிடப்பட்டு வருகிறது. `இந்து தமிழ் இயர்புக் – 2022’ முதல் பிரதியை தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சி. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.அவருடைய அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.

போட்டித் தேர்வுக்கு பயன்படும்

அதைத் தொடர்ந்து அவர் பேசியபோது “இந்து தமிழ் இயர் புக்-2022-ல் போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்கான கட்டுரைகள், பொதுஅறிவுக் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமான அரசுப் பொறுப்புகளைப் பெற வழிவகுக்கும் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெறுவதற்கு, ‘இந்து தமிழ் இயர்புக்-2022’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

2022-ல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘இந்து தமிழ் இயர்புக் 2022’ போட்டித் தேர்வர்களுக்கு அவசியம் தேவைப்படும். டிஎன்பிஎஸ்சி. தேர்வுகளில் தமிழ்பாடத்தாள் கட்டாயம், அதில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்ப் பாடத்தாளில் வெற்றிபெறுவதற்கு வழிகாட்டியாகப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் குறித்த போட்டித் தேர்வு வழிகாட்டி ‘இந்து தமிழ் இயர்புக்’கில் இடம்பெற்றுள்ளது.

ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும், என்ன செய்தால் இந்தத் தேர்வுகளில் வெல்லலாம் என்பது குறித்த தனித்துவமான ஆலோசனைகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஆட்சிப்பணி அதிகாரிகள் 5 பேர் இந்தப்புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப்புத்தகத்துக்குப் பங்களித்துள் ளனர்.

800 பக்கங்கள் கொண்ட ‘இந்து தமிழ் இயர்புக் 2022’ ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. `இந்து தமிழ் திசை’ சென்னை அலுவலகத்திலும், தமிழகம் முழுவதும் உள்ள முன்னணிக் கடைகளிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். store.hindutamil.in/publications என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்தும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், ‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque எடுத்து, இந்து தமிழ் இயர் புக் 2022, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை – 600 002 எனும் முகவரிக்கு அனுப்பி அஞ்சல்/கூரியர் மூலமும் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 74012 96562 / 74013 29402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x