

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
தேர்தலில் அதிமுக, திமுகவை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்விரண்டு கட்சிகளும் மது ஒழிப்பு உட்பட எந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்காது.
தேமுதிகவில் இருக்கும் அப்பாவிகளை வளைக்க முயற்சிக்கிறது திமுக. ஒன்றிரண்டு பேர் செல்வதால், தேமுதிக அழிந்துவிடாது.
பணம், பதவிக்காக யாரும் விஜயகாந்திடம் வரவில்லை.
ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுகவுக்கு அறைகூவல் விடுக்கிறேன். தேமுதிகவைப் பார்த்து திமுக ஏன் பயப்படுகிறது? ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்திக்க திமுக தயாரா? அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உருவெடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு பெருகுகிறது. வரும் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநாடு முடிந்த பின்னர், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.