

திருவள்ளூர்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1,09,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் சி.எஸ்.ஐ. கௌடி மேல்நிலைப் பள்ளியில் 850 மாணவ-மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதை பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி வரை 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 74,106 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.