Published : 12 Jan 2022 10:04 AM
Last Updated : 12 Jan 2022 10:04 AM

காய்கறி அங்காடியை மூட எதிர்ப்பு தெரிவித்து ஆரணி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வியை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள்.

திருவண்ணாமலை

ஆரணியில் காய்கறி அங்காடியை மூட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு முற்று கையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி காய்கறி அங்காடியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த அங்காடிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் எனக்கூறி, அங்காடியை மூட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி, அங்காடியை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த காய்கறி வியாபாரிகள், நகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலகத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “பொங்கல் பண்டிகை வருவதால், அங்காடியை மூட அவகாசம் அளிக்க வேண்டும். அல்லது ஆரணி கோட்டை மைதானத்தில் திறந்தவெளியில் கடைகளை அமைத்து, சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி, “வாக னங்கள் மூலமாக வீதி, வீதியாக சென்று காய்கறிகளை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோட்டை மைதானத்தில் அனுமதி வழங்க முடியாது. அதேநேரத்தில் உங் களது கோரிக்கையை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும்” என்றார். நகராட்சி ஆணை யாளரின் அறிவிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்துவிட்டு வியாபாரிகள் வெளியேறினர்.

இந்நிலையில், காய்கறி அங்காடி வழக்கம்போல் நேற்று இயங்கியது. காய்கறிகளை தடையின்றி பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், அங்காடிக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வரக் கூடும் என்பதால், அங்காடியை மூடி, மாற்று நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் உத்தர விட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, ஆரணி கோட்டை மைதானத்தில் நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி நேற்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர், நகராட்சி அலுவலர்களுடன் காய்கறி கடைகளை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி, இடத்தை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், கோட்டை மைதானத்தில் இன்று முதல் காய்கறி கடைகள் செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x