Published : 11 Jan 2022 05:36 AM
Last Updated : 11 Jan 2022 05:36 AM

முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரோனா தொற்று கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்தும், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை: சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தமிழகத்தை தொற்று பாதிப்பு இல்லாதமாநிலமாக உருவாக்கவும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசிசெலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை மொத்தம் 8.83 கோடிகரோனா தடு்ப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 17 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 3.15 கோடிபேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும்சிறப்பு முகாமை ஜன.3-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். அதில் 33.46 லட்சம் பயனாளிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 21 லட்சத்து 52,755 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், மனநலம்பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறப்புக் கவனம் அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 5 லட்சத்து 65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9 லட்சத்து 78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20 லட்சத்து 83,800 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தகுதியான 2 லட்சத்து 6,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 1,069 இணை நோய் உள்ளவர்கள் என 4 லட்சத்து 13பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை எம்ஆர்சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத் துறை சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார், செய்தித்துறை செயலர் மகேசன்காசிராஜன், பொது சுகாதாரத்துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x