

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சுரப்பா வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஆணைய விசாரணை அறிக்கை அடிப்படையில் சுரப்பா மீது மேல்நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
நீதிபதி வி.பார்த்திபன் முன்புஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘விசாரணை நடத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை சுரப்பாவுக்கு வழங்க அரசு ஏன் தயங்குகிறது’’ என்று கேள்வி எழுப்பினார். ‘விசாரணை ஆணையம் அமைத்தது குறித்து வேந்தரின் கவனத்துக்கே கொண்டு செல்லப்படவில்லை’ என சுரப்பா தரப்பில்குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.