

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை கொளத்தூரில் வரும் 11-ம் தேதியன்று தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் நாளை நடக்கவுள்ளது. இந்த சூழலில், விஜயகாந்தின் பிரச்சார பயணங்கள் குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விஜயகாந்த் தனது முதல் பிரச்சாரத்தை சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடங்கவுள்ளார்.
விஜயகாந்தின் முதல் பிரச்சாரம் கொளத்தூர் அகரம் அருகே நாளை நடக்கவுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் திண்ணை பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அந்த பிரச்சாரத்தின்போது, தேமுதிகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த யுவராஜின் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதும் விஜயகாந்த், தனது முதல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலினின் தொகுதியிலிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது.