

சென்னை: கரோனா வைரஸ் உருமாறி, ஒமைக்ரான் என்ற பெயரில் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு நமது பாரம்பரிய யோகா,ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் (நேச்சுரோபதி) மூலம் தீர்வு காண முடியும் என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவ தொடங்கி 2ஆண்டு ஆகிவிட்டன. உலகையே அச்சுறுத்திவரும் இந்த வைரஸுக்கு எந்த மருத்துவ அமைப்புகளாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. தடுப்பூசி மட்டுமேகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் கடந்த 20மாதங்களில் கரோனா தடுப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. நவீன மருத்துவ அறிவியலால் செய்ய முடியாததை நாம் செய்துள்ளோம். கரோனா மருந்தான கரோனில், ஷ்வாஸரி, அஸ்வகந்தா, சியவன்ப்ராஷ் உள்ளிட்ட 30 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
சில மருத்துவ மாஃபியாக்கள் தங்களின் சுயநலத்துக்காக இதைஎதிர்க்கலாம். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆராய்ச்சிகளால் பயனடைந்து பாராட்டியுள்ளனர். கரோனா 3-ம் அலை பரவிவரும் இவ்வேளையில், மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து பதஞ்சலி மருத்துவ மையங்களிலும் ‘கரோனில் கிட்’ மருந்துகளுக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘பதஞ்சலி ஆர்டர் மீ’ செயலி மூலமோ www.patanjaliavurved.net இணையதளம் மூலமோ ஆர்டர் செய்யலாம்.
லேசான மிதமான மற்றும் தீவிரமான கரோனா தொற்றாளர்களுக்கு கரோனில் மருந்தை கொடுத்து, அவர்களைச் சிக்கலில் இருந்து விடுவித்துள்ளோம், மிதமான மற்றும் தீவிரமான நோயாளிகளின் தரவு எங்களிடம்உள்ளது. கரோனா தொற்றின் மீது இந்த மருந்து நன்கு செயல்பட்டுள்ளது.
அதிக பரவல் விகிதத்தை கொண்டுள்ள ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு, பாதிப்பு குறைவாக இருந்தாலும், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நீரிழிவு நோய் மற்றும் வேறு சில நோயாளிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மூலம்சிறந்த எதிர்ப்பு சக்தியைப் பெறமுடியும். நமது பாரம்பரிய அறிவியல் முறைகளை முடிந்தவரை நோய்களைத் தீர்க்க பயன்படுத்துங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.