மதுரை: கரோனாவால் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய், மகனிடம் விசாரணை

மதுரை: கரோனாவால் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய், மகனிடம் விசாரணை
Updated on
1 min read

மதுரை சிலைமான் அருகே கரோனா அச்சத்தில் லட்சுமி, அவரது மகள் ஜோதிகா ஆகியோர் தங்களது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாங்களும் குடித்தனர். இவர்களில் ஜோதிகா, அவரது மகன் ரித்தீஸ்(4) உயிரிழந்தனர். லட்சுமி, அவரது மகன் சிபிராஜ் சிகிச்சை பெறுகின்றனர்.

லட்சுமியின் மற்றொரு மகன் ஆதீஸ்வரன் விஷம் குடிக்கவில்லை எனத் தெரிகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள லட்சுமி, சிபிராஜிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் விஜயசரவணன் உள்ளிட் டோர் விசாரித்தனர். லட்சுமியின் கணவர் நோயால் இறந்ததால் இவர் பாத்திரம் விற்பதும், இச்சூழலில் மகள் ஜோதிகாவுக்கு கரோனா வந்ததால் குடும்பமே தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. ஆதீஸ்வரனுக்கு சிறு நீரகக் கோளாறு உள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழுவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in