தொடர்ந்து புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா: சிகிச்சையில் 1,722 பேர்

கரோனா பரிசோதனை | பிரதிநிதித்துவப் படம்.
கரோனா பரிசோதனை | பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதிதாக 489 பேருக்குத் தொற்று உறுதியானதையடுத்து தற்போது சிகிச்சையில் 1,722 பேர் உள்ளனர்.

புதுவை மாநிலத்தில் நேற்று ஆயிரத்து 570 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று புதிதாக 489 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 438, காரைக்காலில் 49, ஏனாமில் 1, மாஹேவில் ஒருவர் புதிதாகத் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 85, காரைக்காலில் 16, மாகேவில் 11 பேர் என 112 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 300, காரைக்காலில் 158, ஏனாமில் 4, மாஹேவில் 48 பேர் என ஆயிரத்து 610 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 722 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.

புதுவையில் 11, காரைக்காலில் 6 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உள்ளது.

புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 65 ஆயிரத்து 767 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கும்போது தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளது. புதுவையில் கரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in