

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து முதல்வர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் அறிவிப்பு வெளியான உடனே, கரோனா நோய்த் தொற்று பரவி விடாமலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் வகையிலும் விதிமுறைகள் வெளியாகும். அதன் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படும்" என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.