Published : 27 Apr 2016 03:26 PM
Last Updated : 27 Apr 2016 03:26 PM

கொளத்தூரில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

திமுக பொருளாளர் ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை கொளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ரூ.4.13 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x