

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் 19 முதல் பிப். 18-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான எமிஸ் இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன.10) நிறைவுபெறுகிறது. இந்நிலையில், கலந்தாய்வுக்கு பதிவுசெய்யும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கை;
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் நீதிமன்ற வழக்கு, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் புகார்களுக்கு உள்ளாகி இருப்பினும், அவர்கள் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்.
அதேபோல, ஒரு ஆசிரியர் உரிய தகவலின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் இருந்தால், அதை காலிப் பணியிட பட்டியலில் சேர்க்க வேண்டும்.காலிப் பணியிட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றிய பின்பு, திருத்தங்கள் செய்யாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர, உபரி ஆசிரியர்கள்உள்ள பள்ளியில் இருந்து யாரேனும் பதவி உயர்வில் செல்லும்பட்சத்தில், சார்ந்தவரை பணிநிரவல் பட்டியலில் சேர்க்கக்கூடாது. ஒரு ஆசிரியருக்கு பதிலாக மற்றொருவர் பணி நிரவலில் செல்லவிரும்பினாலும், அனு மதிக்கவேண்டும். மேலும், கலந்தாய்வுக் கான முன்னேற்பாடுகளை மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.