

வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். புதிய முகங்கள் 8 பேருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத் துள்ளது.
தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, திமுக, பாஜக, பாமக, மக்கள் நலக்கூட்டணி என 5 முனை போட்டியிடு கிறது. இதற்காக அக்கட்சியினர் தேர்தல் வியூகங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக சார்பில் நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டபேரவைத் தொகுதிகளில் அமைச்சர் வீரமணியைத் தவிர 8 புதுமுகங்களுக்கு அதிமுக வாய்ப்பு கொடுத்துள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக கோ.சி.மணிவண்ணன் (41) அறிவிக்கப்பட்டுள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ளார். 1992-ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். அம்மா பேரவை துணைச் செயலாளராகவும் கிளை கழகச் செயலாளராகவும் ஊராட்சி கழகச் செயலாளராகவும் சட்டப்பேரவை தொகுதி கழகச் செயலாளராகவும் தற்போது, கிழக்கு மாவட்டப் பொருளாளராக உள்ளார். இவரது மனைவி கோமதி 2011-ம் ஆண்டு ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வாகி நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். இவர்களுக்கு பனிமலர் என்ற மகளும், மணிமாறன் என்ற மகனும் உள்ளனர்.
சோளிங்கர்
சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஜி.பார்த்தீபன் (41) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ., பி.எல் பட்டம் பெற்றவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவரணி செயலாளராகவும் வேலூர் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளராகவும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர், சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடியாத்தம்
குடியாத்தம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன் (35) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.எஸ்., பி.எல்., வழக்கறிஞர். கடந்த 2008 முதல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். தற்போது, மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட மகளிரணி பொருளாளராக உள்ளார். இவரது கணவர் பத்மநாபன், வேலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக உ்ள்ளார். இவருக்கு சஞ்சய் சீனிவாசன், சுஜய் சீனிவாசன் என 2 மகன்கள் உள்ளனர்.
ஆற்காடு
ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாள ராக கே.வி.ராமதாஸ்(63). பிஎஸ்ஸி., பி.எட் படித்துள்ளார். சிப்காட்டில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 1972-ம் ஆண்டு முதல் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார். 1986-1991 வரை திமிரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். 1989-ல் ஆற்காடு தொகுதியில் சேவல் சின்னத்திலும் 1996-ல் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, ஆற்காடு தொகுதி செயலாளராக உள்ளார்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஜி.லோகநாதன் (54).லத்தேரி அடுத்துள்ள செஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2002-ம் ஆண்டு முதல் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலவை பிரதிநிதியாகவும் கிளைக் கழகச் செயலாளராகவும் ஒன்றிய பிரதிநிதியாகவும் மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். தற்போது, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். இவருக்கு லதா என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.கலையரசு அறிவிக்கப் பட்டுள்ளார். எம்.காம் பட்டதாரி. விவசாயம் மற்றும் ஆங்கில மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளராக அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இவருக்கு விஜி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
வேலூர்
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக ப.நீலகண்டன்(64). கடந்த 1986-ல் வேலூர் நகராட்சி வார்டு கவுன்சிலராக இருந்தார். 1989-ல் சேவல் சின்னத்தில் வேலூர் எம்எல்ஏவாக போட்டியிட்டு தோல்வி அடைந் தார். 1990 முதல் 2002 வரை வேலூர் நகரச் செயலாளராகவும் 1994-1996 வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பால்வளத் தலைவராகவும் 2002 - 2006 வரை வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் 2001-2006 வரை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ வாகவும் இருந்துள்ளார். தற்போது, வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், ரம்யா, நர்மதா, அபிராமி 3 மகள்களும் உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக சுமைதாங்கி சி.ஏழுமலை (46) அறிவிக்கப்பட்டுள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1986-ம் அண்டு முதல் கட்சியில் உள்ளார். 1991-2001 வரை மேலவைப் பிரதிநிதியாகவும் 2001-2006 வரை கிளை கழகச் செயலா ளராகவும், வாலாஜா ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும் இருந் துள்ளார். 2010-ல் வாலாஜா ஒன்றிய இணைச் செயலாளராகவும் 2010-2011-ல் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராகவும் 2013-2014 வரை வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். தற்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி யும், 6 மகள்களும் உள்ளனர்.
காட்பாடி
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாள ராக எஸ்.ஆர்.கே.அப்பு (38) அறிவிக்கப் பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் ரயில்வே சப்-கான்ட்ராக்டர். பி.காம்., படித் துள்ளார். 2001-2009 வரை மேலவை பிரதிநிதியாகவும் 2009-2013 வரை இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளராகவும் இருந் துள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2013-2014 வரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக கே.சி. வீரமணி அறிவிக்கப் பட்டுள்ளார். இவர், தற்போது தமிழக கல்வித்துறை அமைச்சராக உள்ளார். பி.ஏ. வரை படித்துள்ளார். பீடி தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். ஜோலார்பேட்டை கிளைச்செயலாளராக வும் ஒன்றியச் செயலாளராகவும் மாவட்ட துணைத் தலைவராகவும் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளராகவும், 2006 முதல் மேற்கு மாவட்டச் செயலா ளராக உள்ளார். இவருக்கு மேகலை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பா ளராக டி.டி.குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பி.காம் வரை படித்துள்ளார். திருப்பத்தூர் நகர கழகச் செயலாளராகவும் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார்.இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளராக டாக்டர் நீலோபர்கபீல் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006-ல் அதிமுக கவுன்சிலராகவும் 2011-ல் நகராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும், வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகவும் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளராகவும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆம்பூர்
ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பா ளராக ஆர். பாலசுப்பிரமணியம் அறிவிக்கப் பட்டுள்ளார். 10-ம் வகுப்பு வரை படித் துள்ளார். தோல் தொழிற்சாலை, விவசாயம் செய்து வருகிறார். இவர், வேலூர் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவைச் செயலாள ராகவும் ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி சங்கீதா பாலசுப்பிரமணி தற்போது ஆம்பூர் நகராட்சித் தலைவராக உள்ளார்.