

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி வாகனங்கள் ஓடாததால் சாலை கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுஊரடங்கு அமலுக்கு வந்தது. மாவட்டத் தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் ஓடவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மாவட்டம் முழுவ தும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரணமின்றி வெளியில் வரும் நபர்களை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் ஆகியவை மூடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் அத்தியா வசிய தேவையின்றி வேறு எங்கும் சென்றிடாத வகையில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் பிரதான தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கக் கூடிய நெடுஞ்சாலைகள் என்பதால் 1,000-க்கும்மேற்பட்ட காவல் துறையினர் கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப் போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிபைக்கில் சுற்றியதாக 225 பேர் மீதுவழக்குப் பதிவு செய்தனர். அவர்களுக்குஅபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்யாமல் எச்சரிக்கை விடுத்துஅனுப்பினர். மேலும் முகக் கவசம்அணியாமல் வெளியே சென்றதாக 364 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன்மூலம் ரூ.72,800 அபராதத் தொகை யாகவும் வசூலிக்கப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள வழி காட்டு நெறிமுறைகளின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 100 சதவீதம் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நாதா தெரிவித்தார்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்டஆட்சியர் மோகன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளும் முழுமையாக விரைந்து முடித்திடவருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறைமற்றும் சுகாதாரத்துறை அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலை யத்தில், நகராட்சித் துறையின் சார்பில் நவீன ஜெட்ராடிங் கம்பரசர் கொண்ட அதிநவீன வாகனத்தை மூலம் கிருமி நாசினி மூலம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள், சுவரின் கரைகள், நடைபாதைகள், தூண்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் சிறப்பு பயிற்சி பெற்ற தூய்மைப் பணி யாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், முக்கிய கடை வீதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள் ளப்பட்டதை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார். பொதுமக்கள் அதிகம் புழங்கக் கூடிய இடங்களில், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திடவும், தூய்மைப்பணி மேற்கொள்ளவும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரி வித்தார். அப்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா மற் றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வானூரில் விதி மீறிய நிறுவனத்துக்கு அபராதம்
கள்ளக்குறிச்சி
நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் பூத்துறையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் நிறுவனம் பணியாட்களோடு செயல்படுவதாக வானூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் நரசிம்மன் ஆகியோர் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு 20 நபர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், ஊரடங்கு தினத்தில் நிறுவனம் இயங்கி வருவதையும் அறிந்தனர். இதையடுத்து நிறுவன உரிமையாளரை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு ரூ.5,000 அபராதம் விதித்தனர்.