

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி நரிக்குடி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 18 பேர் விருதுநகரில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்தித்த ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு சமூகத்துக்கு சிறந்த பங்காற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.