முதல்வர் கூட்டத்துக்கு சென்ற அதிமுக தொண்டர் கை எலும்பு முறிவுடன் மீட்பு

முதல்வர் கூட்டத்துக்கு சென்ற அதிமுக தொண்டர் கை எலும்பு முறிவுடன் மீட்பு
Updated on
1 min read

சேலத்தில் தமிழக முதல்வர் ஜெய லலிதா பங்கேற்ற தேர்தல் பிரச் சார கூட்டத்துக்கு சென்ற அதிமுக தொண்டர் மாயமானார். 2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் கை எலும்பு முறிந்த நிலையில் அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டனர்.

சேலம், ஜாகீர் அம்மாப்பாளை யம், காளியம்மன் கோயில் வீதி யைச் சேர்ந்தவர் நந்தகுமார்(65). கட்டிட கூலி தொழிலாளியான இவர் அதிமுக முன்னாள் கிளை செயலாளர். இவரது மனைவி பாப்பாத்தி. நந்தகுமார் கடந்த 20-ம் தேதி சேலம் மகுடஞ்சாவடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சார கூட்டத்துக்கு அதிமுக-வினர் ஏற்பாடு செய்த வேனில் சென்றார்.

கூட்டத்துக்கு பின்னர் 23-ம் தேதி வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி பாப்பாத்தி, மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் செய்தார். மேலும் குடும்பத்தினருடன் மகுடஞ் சாவடி சுற்றுவட்டாரப் பகுதியில் பாப்பாத்தி தனது கணவரை தேடி னார்.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி மகுடஞ்சாவடியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள சாலையோரம் நந்தகுமார் கை எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் படுத்து இருந் ததை அவரது குடும்பத்தினர் கண்டு பிடித்தனர். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தொடர் சிகிச்சை பெற்று வரும் நந்தகுமார் கூறும்போது, ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சார கூட்டத்துக்கு சென்றிருந்தேன். கடும் வெயிலில், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண் டேன். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்தேன். தொண்டர்கள் என் கையை மிதித்ததில், கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியில் நடந்து சாலையோரம் வந்தபோது மயக்கம் அடைந்தேன்.

மயக்கம் தெளிந்தபோது என்னி டம் பணம் இல்லாததால் வீடு திரும்ப முடியவில்லை. மேலும் என்னால் நடந்து செல்ல முடிய வில்லை. இதனால், சாலையோரம் படுத்துவிட்டேன். என் குடும்பத்தினர் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in