கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தன: கத்தரி, புடலங்காய் கிலோ ரூ.10-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தன: கத்தரி, புடலங்காய் கிலோ ரூ.10-க்கு விற்பனை
Updated on
1 min read

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கத்தரிக்காய், முள்ளங்கி, புடலங்காய் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்தன. இதனால் வரத்து குறைந்து அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தன. கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் பெரும்பாலான காய்கறிகள் ரூ.50-க்கு மேல் விற்கப்பட்டன. தக்காளி கிலோ ரூ.110 வரையும், கத்தரிக்காய் ரூ.80 வரையும் உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் குறிப்பிடும்படியாக மழை இல்லை. இதனால் உற்பத்தி அதிகரித்து காய்கறிகளின்விலை தற்போது குறைந்து வருகிறது. குறிப்பாக கத்தரி, முள்ளங்கி, புடலங்காய் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

மற்ற காய்கறிகளான நூக்கல் ரூ.12, உருளை ரூ.14, பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், அவரை தலா ரூ.20, தக்காளி ரூ.25,பாகற்காய், வெண்டை தலா ரூ.30,பீட்ரூட் ரூ.35, கேரட், சாம்பார் வெங்காயம் தலா ரூ.40, முருங்கை ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது.

காய்கறி விலை குறைந்து வருவது தொடர்பாக, கோயம்பேடுசந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, "வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்து வருகிறது. பொங்கலுக்கு பிறகுமேலும் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in