

சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது: கோயிலில் உள்ள தங்கத்தை அறங்காவலர் இல்லாமல் உருக்க முடியாது. அறங்காவலர் இல்லாமல் தன்னிச்சையாக எந்தசெயலையும் செய்யக் கூடாது. இதில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது. அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறங்காவலர் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை.
இந்து சமய அறநிலையத் துறையில்இருப்பவர்கள் பக்தியோடு இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதற்கு மாறாகசெயல்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஜெயங்கொண்டத்தில் இருக்கும் கோயிலை இடித்தது உட்பட பல்வேறு கோயில்களின் நிதியைசூறையாடும் நோக்கில் அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
கோயில்கள் சீரமைப்பு, மேம்பாடு விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழக அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக மக்களை ஒன்றிணைத்து போராட வேண்டிய நிலை உள்ளது. இந்து கோயில்களை முழுமையாக அழித்துவிடும் நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது என்றார்.