

வைப்பாற்றில் மூழ்கி தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள நென்மேனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜய லட்சுமி(37). மகன்கேசவன்(10).
மகன் கேசவனையும், உறவினரான சிவகாசியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் பூர்ணகோகுல்(10) என்பவரையும் விஜயலட்சுமி நேற்று மாலை அழைத்துக் கொண்டு வைப் பாற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது பூர்ணகோகுல் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் சிக்கினார். அவரைக் காப்பாற்ற கேசவனும், விஜயலட்சுமியும் முயன்றனர். அப்போது நீரில் மூழ்கி மூன்று பேரும் இறந்தனர். அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி சடலங்களை மீட்டனர். இது குறித்து இருக்கன்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.