ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு 

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை: ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடந்த 5ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கரோனா பரவலைத் தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கெனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in