தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
Updated on
1 min read

தேமுதிக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வி.சி.சண் முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக மாநில விவசாய அணி துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி.சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் திரிபுரசுந்தரி ஜெயராமன், கடலூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் நத்தம் ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக மாவட்டப் பிரதிநிதி ஆர்.சேதுராமன், திருவொற்றியூர் நகர இளைஞரணி செயலாளர் எஸ்.பி.சோமசுந்தரம், துணைச் செயலாளர் ஆர்.சாய்கார்த்தி கேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.மணி உள்ளிட்ட 50-க்கும் அதிகமானோரும் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அப்போது திமுக துணைப் பொதுச்செய லாளர் வி.பி.துரைசாமி, அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பலர் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். தேமுதிக வடசென்னை மாவட்டச் செய லாளர் வி.யுவராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.தினேஷ் ஆகியோர் திமுக வில் இணைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in