புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி முறிவு: 16 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி முறிவு: 16 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து 30 தொகுதிகளில் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு காத்திருந்தும் என்.ஆர். காங்கிரஸ் கண்டுகொள்ளாத தால் பாஜக இம்முடிவை எடுத்துள் ளது. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில் பாஜக தனது தேர்தல் பணியை தொடங்கியது. முதல் கட்டமாக 16 தொகுதிகளின் வேட் பாளர்கள் பட்டியல் நேற்று பாஜக இணையத்தில் வெளியிட்டது. இந்நிலையில் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் எம்பி மகேஷ்கிரி இன்று புதுச்சேரி வருகிறார். அவர் முதல்கட்ட பட்டியலை புதுச்சேரியில் வெளியிட உள்ளார்.

அதன் விவரம்:

மண்ணாடிப்பட்டு - சரவணன் என்கிற சதாசிவம், ஊசுடு - சரவணகுமார், வில்லியனூர் - மோகன்குமார், உழவர்கரை - அகிலன், தட்டாஞ்சாவடி - சிவானந்தன், காமராஜர் நகர் - ரவிசந்திரன், லாஸ்பேட் - சாமிநாதன், முத்தியால்பேட் - சிவகுமார், ராஜ்பவன் - புகழேந்தி, முதலியார்பேட் - செல்வன், மணவெளி - தங்கவிக்ரமன், நெட்டப்பாக்கம் - விஸ்வமோகன், நெடுங்காடு - காமராஜ், காரைக்கால் வடக்கு - அருள்முருகன், மாஹே - தேவராஜன், ஏனாம் - ராமதாஸ் கனகலா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in