Published : 08 Jan 2022 11:21 AM
Last Updated : 08 Jan 2022 11:21 AM

விழுப்புரம் மாவட்டத்தில் தொற்றை எதிர்கொள்ள 2,800 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள்

கரோனா பரவல் மீண்டும் அதிக ரித்து வரும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் 7 கரோனா சிகிச்சைமையங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளில் 2,800 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே பெரும் பாக்கத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில் 246 படுக்கை வசதிகளுடன் கூடியகரோனா சிகிச்சை மையம் அமைப் பது குறித்து ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் கரோனா சிகிச்சை மையத்தில் 246 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.

இச்சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் ஒவ்வொருவ ருக்கும் போர்வை, பக்கெட், சோப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் சுகாதா ரமான முறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ மனை மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 1,400 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 50 சதவீதபடுக்கை வசதிகள் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடியதாகும்.எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று பாதித்தவர்களை கண்ட றிந்து, வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவது குறித்தும், அறிகுறியுடன் கூடிய தொற்றுள்ள நபர்களை கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்து சிகிச்சைஅளிப்பது குறித்தும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோ சனை செய்துள்ளோம்.

அதன்படி மாவட்டத்தில் 7 கரோனா சிகிச்சை மையங்களில்; 1,400 படுக்கை வசதிகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1, 400படுக்கை வசதிகளும் என மொத்தம் 2,800 படுக்கை வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றுமுதல் 7 கரோனா சிகிச்சை மையங்களும் தயார் நிலையில் வைத் திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜசேகரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் குந்தவிதேவி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சண்முகக்கனி, துணைஇயக்குநர் பொற்கொடி, கோட் டாட்சியர் அரிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x