உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும்
Updated on
1 min read

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் 21-ம் தேதி முடிவடைகின்றன. சில பள்ளிகளில் 20-ம் தேதி முடிவடைந்துவிட்டன. வருடாந்திர தேர்வைத் தொடர்ந்து அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 22-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

தொடக்கக் கல்வி இயக்குநரகத் தின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 30-ம் தேதி முடிவடையும். அவர் களுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் ஜூன் 1-ல் மீண்டும் திறக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in