Published : 11 Apr 2016 08:05 AM
Last Updated : 11 Apr 2016 08:05 AM

ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்ததால் அதிருப்தி: முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸில் இணைய முடிவு

மக்கள் நலக் கூட்டணியில் இணைந் ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மூத்த தலைவர்கள் பலர் போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் அக்கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, எஸ்.கே.கார்வேந்தன், சேலம் தேவ தாஸ், உடையப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.எம்.முனிரத்தினம், தண்டபாணி, டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் மற்றும் 20 மாவட்டத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கான முக்கிய நிர்வாகிகள் விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளனர்.

அதிமுகவுடனான கூட்டணி முயற்சி தோல்வியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. அக்கட்சிக்கு 26 தொகு திகள் ஒதுக்கப்பட்டன. இந்த அறி விப்பு வெளியான சில மணி நேரத்தில் தமாகா மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், பொதுச்செயலாளர் பி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.

இது தொடர்பாக தமாகா மூத்த தலைவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்:

எந்தக் காரணத்தை முன்னிட்டும் விஜயகாந்தை முதல்வர் வேட் பாளராக ஏற்க முடியாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஏதாவது ஒரு கூட்டணியில் சேர வேண்டும் என முடிவெடுப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. எனது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்.

பீட்டர் அல்போன்ஸ்:

தமாகா என்பது வாசனை முதல்வராக்கு வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால், அவரோ விஜயகாந்தை முதல்வராக்குவேன் என்று சொல் வதை எந்த தமாகா தொண்டனாலும் ஏற்க முடியாது. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பலர் என்னுடன் பேசி வருகின்றனர். அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறி விக்க இருக்கிறேன்.

பி.விஸ்வநாதன்:

காமராஜர் ஆட்சிதான் எங்கள் லட்சியம். எங்க ளால் விஜயகாந்தை முதல்வர் வேட் பாளராக ஏற்க முடியாது. எனவே, மக்கள் நலக் கூட்டணியில் இணைவது என்ற வாசனின் முடிவை எதிர்த்து தமாகாவில் இருந்து விலகுகிறேன். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் நல்ல முடிவை அறிவிப் போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள் என தமாகா முக்கிய நிர்வாகிகள் பலர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் விரைவில் காங்கிரஸில் இணைய இருப்பதாக தமாகா நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x