ஒமைக்ரான் பரவல் எதிரொலி: கேரள எல்லையில் தீவிர பாதுகாப்பு

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: கேரள எல்லையில் தீவிர பாதுகாப்பு
Updated on
1 min read

சென்னை: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைத் துறை அதிகாரிகளும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. தமிழக மக்களுக்கு ஒமைக்ரான் பரவாமல் தடுக்க, தமிழக-கேரள எல்லைகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில்பாதுகாப்புப் பணிகளில் கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.

வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருட்கள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றன. கோவை வாளையாறு பகுதியில் உள்ள சோதனைச் சாவடி வழியாக கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவராமல் தடுக்க தீவிர சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக போலீ ஸார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து சில நேரங்களில் கோழி இறைச்சிக் கழிவுகளை சரக்கு வாகனங்களில் கொண்டுவந்து, தமிழகப் பகுதிகளில் கொட்டிச் செல்வார்கள். இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து, முட்டைபோன்றவை கொண்டுவரப்பட்டால், அவை திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடை மருத்துவக் குழுவினரும் போலீஸாருடன் இணைந்து, தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தும், வாகனத்தில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தும் வருகின்றனர். முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in