

சென்னை: ஹோமம் வளர்க்கும்போது தூபத்தை பயன்படுத்துவது, பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதை பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, சான்றுகள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற புகழ்பெற்ற அமெரிக்க அறிவியல் இதழில் (https://doi.org/10.1177/2515690X211068832) வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கூறும்போது, “பழங்கால இந்திய தினசரி நடைமுறையாக ஹோமம் வளர்த்தல் இருந்துள்ளது. இது மன அமைதியை அடைவதற்கான ஆன்மிக வழி மட்டுமல்ல. உடல்ஆரோக்கியத்துக்கு தேவையானசுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தவும் உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பதஞ்சலி ஆராய்ச்சி மையத் துணைத் தலைவர் டாக்டர் அனுராக்வர்ஷ்னி வெளியிட்ட அறிவியல்பூர்வ தகவலில், “ஹோமத்தில்‘விஷாகன் தூப்’ பயன்படுத்தும்போது, அது நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோல், நுரையீரல், வயிறு மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளின் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விஷாகன் தூப் புகை சிகிச்சை மூலம் இந்த நோய்க்கிருமிகள் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ‘ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி’ மூலம் ஆய்வு செய்தபோதுவிஷாகன் தூப் புகை நானோ அளவிலான துகள்களால் ஆனது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், விஷாகன் தூப் புகைமனித நுரையீரலுக்குப் பாதிப்பைஏற்படுத்துகிறதா என்ற ஆராய்ச்சியில், இது நுரையீரல் செல்களுக்குபாதுகாப்பானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தின் வளமான விஞ்ஞான பகுத்தறிவை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, நிலையான சூற்றுச்சூழல் நச்சுத்தன்மை அற்ற சூழலை உருவாக்கும் புதிய வாய்ப்பை உருவாக்குகிறது” என்றார்.