

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையத்தில் பாமக புகார் செய்துள்ள தாக அன்புமணி தெரிவித்தார்.
சேலம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதியில் பாமக தேர்தல் அலுவலகத்தை, நேற்று திறந்து வைத்து பிரச்சாரம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இச்சம்பவம் குறித்து 306 சட்டப் பிரிவின்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாமக சார்பில் தமிழக மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். தேவைப்பட்டால் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்வோம் என்று கூறினார்.