Published : 06 Jan 2022 10:17 AM
Last Updated : 06 Jan 2022 10:17 AM

கரூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு

கரூர்: கரூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன் காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். கரூர் உழவர் சந்தைக்கு அதிகாலையில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.

இதையொட்டி கரூர் உழவர் சந்தைபகுதியில் இன்று (ஜன.6ம்தேதி) கரூர் நகர இன்ஸ்பெக்டர் எம்.செந்தூர்பாண்டியன் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கினார்.

மேலும் முகக்கவசம் அணியாத விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என 20 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.

பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், கரூர் டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையில் போலீஸார் சோதனைநடத்தி முகக்கசவம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x