திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறது சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறது சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஏற்கெனவே திட்டமிட்டவாறு நாளை (வெள்ளி) முதல் தொடர்ந்து நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக, யுபிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொற்று சூழல் குறித்து ஆய்வு

கரோனா பெருந்தொற்று சூழல் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஜன.7, 8, 9 மற்றும் 15, 16-ம் தேதிகளில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மெயின் தேர்வு 7-ம் தேதி (வெள்ளி) முதல் தொடர்ந்து நடை பெறும்.

கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்குஎவ்வித இடையூறும் ஏற்படாமல்இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் அடையாள அட்டை மற்றும் ஹால்டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை அனு மதிக்கலாம்.

போக்குவரத்து வசதி

தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு சென்றுவர வசதியாக தேர்வு தொடங்குவதற்கு முந்தைய நாள்(இன்று) முதல் கடைசி நாள் வரைமுடிந்த அளவுக்கு பொதுப்போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in