Published : 06 Jan 2022 08:20 AM
Last Updated : 06 Jan 2022 08:20 AM

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும்: சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தகவல்

சென்னை: கரோனா பரவலால் இன்றும், நாளையும் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

நடப்பாண்டுக்கான சட்டப் பேரவைமுதல் கூட்டம் கலைவாணர் அரங்கில்நேற்று தொடங்கியது. ஆளுநர்உரையுடன் நேற்றைய நிகழ்ச்சிகள்முடிவடைந்ததும், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், நாளை (ஜன. 6) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 7) ஆகிய 2 நாட்கள் மட்டும் பேரவைக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். நாளை மறுதினம் விவாதம் மற்றும் முதல்வரின் பதில் உரையுடன் பேரவைக் கூட்டம் நிறைவுபெறும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு. கேள்வி நேரம் மற்றும் முதல்வர் பதில் உரை ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சிலதலைவர்கள் மட்டுமே பேசுகின்றனர்.கரோனா பரவல் அச்சம் காரணமாக 2 நாட்கள் மட்டுமே கூட்டம்நடத்த முடிவெடுக்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2 உறுப்பினர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகள்சிறப்பாக இருப்பதால், யாரும் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

`ஜெய்ஹிந்த்' கூறியது தவறா?

ஆளுநர் உரையைத் தாண்டி ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதில் ஒரு தவறும் இல்லையே. இந்தியா வாழ்க என்று கூறினால் தவறா? உரையைத் தண்டி நானும் நன்றி, வணக்கம் என்று கூறினேன். அதிலும் தவறு இல்லையே. ஜெய்ஹிந்த் என்று யாரும் கூறக்கூடாது என்று சட்டம் கிடையாது’’ என்றார்.

இந்தியா வாழ்க என்று கூறினால் தவறா? நானும் நன்றி, வணக்கம் என்று கூறினேன். அதிலும் தவறு இல்லையே. ஜெய்ஹிந்த் என்று யாரும் கூறக்கூடாது என்று சட்டம் கிடையாது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x