

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்தைப் பாதியில் நிறுத்தினார்.
மானாமதுரை ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவர் லதா அண் ணாதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முத்துசாமி, பிடிஓக்கள் ரஜினிதேவி, பர்ன பாஸ் அந்தோணி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இதில் நடந்த விவாதம்
பஞ்சவர்ணம் (அதிமுக): மானா மதுரையில் சேதமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்களை இடிக்க விடப்பட்ட ஒப்பந்தத்தில் முறை கேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தாவிட்டால் நீதி மன்றத்தை நாடுவேன்.
அண்ணாதுரை (திமுக): மக்கள் பிரச்சினைகளை மட்டுமே இங்கு பேச வேண்டும். ஒப்பந்ததாரர் போல் பேசக்கூடாது என்றார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கவுன்சிலர் ருக்குமணி (அதிமுக): ராஜகம்பீரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு என்னிடமே ரூ.10,000 கேட்டனர். பணம் கொடுக்காததால் குடிநீர் இணைப்பு தரவில்லை. கடந்த கூட்டத்தில் புகார் தெரி வித்தபோது ஆதாரம் கேட்டீர்கள். தற்போது ஆதாரத்தைக் கொண்டு வந்துள்ளேன் என்றார்.
அண்ணாதுரை: காகித ஆதாரங் களை ஏற்க முடியாது. குடிநீர் இணைப்பு ஊராட்சி நிர்வாகம் சம் பந்தப்பட்ட பிரச்சினை என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோணி: விண் ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
ருக்குமணி: எனக்கு குடிநீர் இணைப்பே வேண்டாம். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டீர்கள்.
அண்ணாதுரை: முறையாகச் செயல்படாததால்தான் மூடப் பட்டது என்றார்.
இதையடுத்து அதிமுக, திமுக கவுன்சிலர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த வட்டார வளர்ச்சி அலு வலர் ரஜினிதேவி கூட்டத்தை பாதி யிலேயே நிறுத்தினார்.