Published : 18 Mar 2016 09:49 AM
Last Updated : 18 Mar 2016 09:49 AM

ஸ்டாலின் - கார்த்திக் சந்திப்பு திடீர் ரத்து

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் - நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் சந்திப்பு திடீரன ரத்து செய்யப்பட்டது.

பல்வேறு சமூக அமைப்புகள், சிறிய கட்சிகளின் தலைவர்கள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் நாடாளும் மக்கள் கட்சி, திமுக கூட்டணி யில் இணைய இருப்பதாகவும், அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த் திக், அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஏராளமான நாடாளும் மக்கள் கட்சித் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூடியிருந்தனர். ஆனால், கடைசி வரை கார்த்திக் வரவில்லை. இதனால் அவரது கட்சித் தொண் டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திமுக கூட்டணியில் சில தொகுதி கள் வேண்டும் என கார்த்திக் வெளிப்படையாக பேசியதால் அவருடனான சந்திப்பை ஸ்டாலின் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x