Published : 30 Mar 2016 10:35 AM
Last Updated : 30 Mar 2016 10:35 AM

தொழில் பயிற்சி பெற்று முன்னேறும் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள்: மெழுகுவத்தி, அகல்விளக்கு தயாரித்து அசத்தல்

மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் மற்றவர்களுக்கு சளைத்த வர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் தொழில் பயிற்சி பெற்று, மெழுகுவத்தி, அகல் விளக்கு, சாக்பீஸ், பினாயில் போன்ற பொருட்களை தயாரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர் ஆஷ்ரயா பள்ளி மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.

தெற்கு ரயில்வே தலைமையக பெண் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆஷ்ரயா எனும் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 22 ஆண்டு களாக செயல்படும் இந்தப் பள்ளியில் 6 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன. இவர்களில், 18 வயது நிரம்பியவர்களுக்கு சிறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக ஆண்களுக்கு கம்ப்யூட் டர் சாம்பிராணி, சாக்பீஸ், பேப்பர் போல்டர், தபால் உறை தயாரிப்பு பயிற்சியும், பெண் களுக்கு பினாயில், அகல்விளக்கு, மெழுகுவத்தி தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதுதவிர, அலுவல கங்களில் உதவியாளர்களாக பணி யாற்ற இருபாலருக்கும் பயிற்சி அளிக் கப்படுகிறது. இதுவரையில் சுமார் 450 பேர் தொழில் பயிற்சி பெற் றுள்ளனர். சிலர், சில கடைகளிலும், தனியார் நூலகங்களிலும், அலுவல கங்களிலும் உதவியாளர்களாகவும் பணி யாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆஷ்ரயா பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிரிதரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: மனநலம் பாதிக் கப்பட்ட மாணவர்களுக்கு நாங்கள் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது, 34 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஓரளவுக்கு வசதியானவர்களிடம் மாதம் ரூ.1000 மாதக் கட்டணம் வசூலிக் கிறோம். மற்றவர்களிடம் பெரிய அளவில் கட்டணம் வசூலிப்பதில்லை.

இந்த பள்ளியில் சேர்க்க மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ், தற்போதைய மருத்துவ அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும். இரவில் இங்கு தங்குவதற்கு வசதி கிடையாது. தினமும் பள்ளிக்கு வந்து வீட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும்.

மற்ற மாணவர்களைப் போல் இவர்களுக்கும் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. ஆனால், அதற்கு சிறிது நாட்கள் தேவைப்படும். இங்குள்ள மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன், அவர்களின் ஆர்வம் ஆகிய வற்றை கண்டுபிடித்து அவர்களுக்கு கல்வியும், பயிற்சியும் அளிக்கிறோம். மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந் தால், ஒவ்வொருவருக்கும் ஒரு வித மான பாதிப்பு இருக்கும். சாதாரண மான வர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளிக்க அதிக கல்வி நிறுவனங் கள் உள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒரு சிலர் மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x