

தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக பாடகர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்க வேண்டும் என திரைப்பட இசை அமைப்பாளர் தேவா வேண்டுகோள் விடுத்தார்.
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரைப்படத்தில் சமீபகாலமாக திரை இசை பாடல்களில் வரும் வரிகள் புரியாத நிலையில் உள்ளன. இந்த கருத்து உண்மை என்றா லும், தற்போது இளைய தலை முறையினர் மத்தியில் இது போன்ற பாடல்களுக்கு வரவேற்பு உள்ளது.
கடந்த காலத்தில் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் ஒரு குடும்ப உறவைப் போல இருந் தனர். தற்போது, மூத்த இசைக் கலைஞர்களுக்கு இளம் பாடகர் கள் மரியாதை தருவது இல்லை. புனிதமான இசையில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்கள் பாடுவது தவறு.
நன்கு தமிழ் கற்ற பாடகிகள்கூட பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி வந்து பாடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ் கலாச் சாரத்தை வளர்க்கும் விதமாக பாடகர்களும் இசை அமைப்பாளர் களும் இருக்க வேண்டும்.
ரீ மிக்ஸ் பாடல்கள் என்பது பழைய பாடல்களை தற்போது வரும் இசை அமைப்பாளர்கள் இசை மற்றும் வரிகளை மாற்றி பாடுவது. அந்த பழைய பாடல் களை இசை அமைத்த இசை அமைப் பாளரையும், பாடகரையும் வேதனை அடைய செய்கிறது. பழைய பாடல்களை ரீ மிக்ஸ் செய்யும் இசை அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர் மற்றும் பாடகர்களின் ஒப்புதல் பெற்றால் ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.