பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?
Updated on
2 min read

பாஜக வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சியின் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் 5 பேர் பெண்கள். பாஜக மத்திய தேர்தல் குழு செயலாளர் ஜே.பி. நட்டா வெளியிட்ட இந்த பட்டியலில், தேசிய செயலாளர் எச்.ராஜா (தி.நகர்), மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), எம்.சக்கரவர்த்தி (திருத்தணி), கருப்பு முருகானந்தம் (பட்டுக்கோட்டை), சிவகாமி பரமசிவம் (கெங்கவல்லி - தனி), மாநிலச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி (பரமக்குடி -தனி), எஸ்.பழனிவேல்சாமி (சோழ வந்தான் -தனி), நாகர்கோவில் நகராட்சித் தலைவர் எம்.மீனாதேவ் (கன்னியாகுமரி), மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்வின் பின்னணி

பாஜக சார்பில் போட்டியிட 234 தொகுதிகளுக்கும் 3 ஆயிரத் துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர் களிடம் தமிழகம் முழுவதும் 13 கோட்டங்களில் நேர்காணல் நடத் தப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலை பாஜக மையக்குழு ஆய்வு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்தது.

ஆனாலும் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் கட்சியின் தேசிய இணை அமைப்பு பொதுச்செய லாளர் பி.எல்.சந்தோஷ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததாக அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர்.

பாஜகவைப் பொறுத்தவரை தேசிய, மாநில அளவில் உள்ள அமைப்பு பொதுச்செயலாளர்கள் தேசிய, மாநிலத் தலைவர்களுக்கு இணையான அதிகாரம் கொண் டவர்கள். அலுவலகம், நிதி நிர் வாகம் என கட்சியின் முழு பொறுப்பும் இவர்களிடம் தான் இருக்கும். இந்தப் பொறுப்புகளில் அனுபவமுள்ள ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்களே நியமிக்கப் படுவர்.

சந்தோஷ், கேசவ விநாயகம் இருவரும் கடந்த ஓராண்டாக 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து நில வரத்தை ஆய்வு செய்துள்ளனர். வேட்பாளர்களை இறுதி செய் வதற்காக கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன், பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன்ராஜூலு ஆகியோருடன் சந்தோஷ், கேசவ விநாயகமும் உடனிருந்தனர்.

மாவட்ட வாரியாக பரிந் துரைக் கப்பட்ட பெயர்கள் வாசிக்கப் பட்டு அவர்களைப்பற்றி விவாதம் நடந்துள்ளது. அதில் சிலரது பெயர் களை நீக்கவும், புதிதாக சிலரை சேர்க்கவும் இந்த இருவரும் பரிந்துரை செய்துள்ளனர். சிலரது பெயரை பட்டியலில் இருந்து நீக்க கோஷ்டி தலைவர்கள் மேற் கொண்ட முயற்சிகளை இவர்கள் முறியடித்துள்ளதாக கூறப்படு கிறது. கடந்த தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களில் சிலர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்வது, வேட்புமனுகளை வாபஸ் பெறுவது, கட்சி மாறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது தேர்தல் களத்தில் பாஜக வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத் தியது.

இந்தத் தேர்தலில் இது போல எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் வழிகாட்டுதலின்பேரில் சந்தோஷ், கேசவ விநாயகம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் முழு கவனம் செலுத்தியதாக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in