ஏழை விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது: சென்னை ஆர்ப்பாட்டத்தில் கண்டனம்

ஏழை விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது: சென்னை ஆர்ப்பாட்டத்தில் கண்டனம்
Updated on
1 min read

பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக வும், ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து கடன் குறித்த் கொள்கை முடிவை அறிவிக்கும் வரை விவ சாயிகளிடம் கடன் வசூல் செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு (அரசியல் சார்பற் றது) சார்பில் சென்னை சேப்பாக்கத் தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங் கடாசலம் பேசும்போது, “ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய முதலாளி களிடம் இருந்து வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வரி பாக்கியை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தவணையை செலுத்தாத விவசாயிகள் மீது வங்கி நிர்வாக மும், காவல்துறையும் சேர்ந்து கடன் வசூல் என்ற பெயரில் அராஜகம் செய்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகள் தங்கள் நலனுக்காக ஒன்றுபட வேண்டும். உங்களோடு இணைந்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் செ.நல்லசாமி பேசும் போது, “விவசாயிகளுக்கு கடன், மானியம் என எதுவும் வேண்டாம். விவசாய கமிஷன் பரிந்துரையை மட்டும் அரசு நடைமுறைப்படுத்தி னால் போதும்” என்றார்.

திரைப்பட இயக்குநர் தங்கர்பச் சான் பேசும்போது, “விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டுமென்றால், இத்தேர்தலை விவசாயிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.

சென்னைவாழ் காவிரி மைந்தர் கள் தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜ சேகரன், நடிகை ரோகிணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ், எக்ஸ்னோரா தலைவர் எம்.பி.நிர்மல் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை கடன் வசூலை நிறுத்த வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தென் மண்டல துணை மேலாளர் சஞ்சீவ் சின்ஹாவிடம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in