

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் உள்ளமண்டபத்தில் மீன்களின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய செயற்கை நீருற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவற்றுக்குத் தடையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளத்தில் உள்ள மண்டபத்தில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டது. அந்தசெயற்கை நீருற்று பழுதாகி இருந்தது. தற்போது, அதுசரி செய்யப்பட்டு, மீண்டும்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில கோயில் குளங்களில் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால், மீன்கள் இறந்த சம்பவங்கள் நேரிட்டுள்ளன. அதேநிலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்திலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கோயில் குளத்தில் படர்ந்திருந்த பாசிகள் அனைத்தையும் அகற்றியுள்ளோம்.
குளத்தில் தண்ணீர் ஓட்டமின்றி இருப்பதால், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் மீன்களுக்கு சிரமம் ஏற்படும். வீட்டில் இருக்கும் மீன்தொட்டிகளில் மோட்டார் பொருத்திதண்ணீரை சுழற்சி முறையில் மீண்டும் தொட்டிகளில் விடும்போது மீன்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். அதேபோல, குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி செயற்கை நீருற்று மூலமாக மீண்டும் குளத்தில் விடும்போது தண்ணீர் ஓட்டம் இருக்கும். இதனால், மீன்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்கும்.
இந்த செயற்கை நீருற்று கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, பின்னர் பழுதாகியிருந்தது. அண்மையில் அதைபழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம் என்றார்.