26-ல் மஜக முதல் மாநில மாநாடு: கருணாநிதி, ராகுலுக்கு அழைப்பு

26-ல் மஜக முதல் மாநில மாநாடு: கருணாநிதி, ராகுலுக்கு அழைப்பு
Updated on
1 min read

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரி, அதில் இருந்து வெளியேறி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் தமிமுன் அன்சாரி ஈடுபட்டு வருகிறார். அன்சாரி தொடங்கிய புதிய கட்சியின் முதல் மாநில மாநாடு, சென்னை பழைய மாமல்லபுரம் சாலை டைடல் பார்க் அருகே உள்ள ஒய்எம்சிஏ திடலில் வரும் 26-ம் தேதி நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு தமிமுன் அன்சாரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in