டிஜிட்டல் மயமாகிறது புதுச்சேரி சட்டப்பேரவை: காகிதமில்லா பட்ஜெட் தாக்கலாகிறது

புதுச்சேரி சட்டப்பேரவையை டிஜிட்டலாக்கும் திட்டம் தொடர்பாக பேரவைத் தலைவர் செல்வத்துடன் விவாதிக்கும் தேசிய ‘இ-விதான்’ தொழில்நுட்பக் குழுவினர். உடன் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர்.
புதுச்சேரி சட்டப்பேரவையை டிஜிட்டலாக்கும் திட்டம் தொடர்பாக பேரவைத் தலைவர் செல்வத்துடன் விவாதிக்கும் தேசிய ‘இ-விதான்’ தொழில்நுட்பக் குழுவினர். உடன் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

டிஜிட்டல் மயமாகும் பணிகளை புதுச்சேரி சட்டப்பேரவைத் தொடங் கியுள்ளது. காகிதமில்லா பட்ஜெட் தாக்கலாகவுள்ளது.

“புதுச்சேரி சட்டப்பேரவை விரைவில் டிஜிட்டல் மயமாக்கப் பட்டு, காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சி யாக நேற்று தேசிய ‘இ-விதான் அப்ளிகேஷன்’ மூலம் சட்டப் பேரவை நடவடிக்கைகள் கணிணி மயமாக்க முன்னோடி செயல் திட்ட அறிக்கை தயாரித்திடவும், சட்டப்பேரவையில் தற்போதுள்ள வசதிகள் குறித்தும் தேசிய ‘இ-விதான்’ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை தலைவர்செல்வம், புதுச்சேரி மாநிலங்க ளவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி மற்றும் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மனோஜ், அருண், விஜய சாரதி, இராமனுஜம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வசதிகளை மேற்பார்வையிட்டனர்.

இதுபற்றி சட்டப்பேரவை தலை வர் செல்வம் கூறும்போது, "மத்திய அரசின் திட்டம் இது. மொத்த மதிப்பீடு ரூ. 10 கோடி. டிஜிட்டல் பணி தற்போது தொடங்கியுள்ளது. வரும் மார்ச்சில் இப்பணி முடிவடையும். அதையடுத்து சட் டப்பேரவை செயல்பாடுகள் இ - டிஜிட்டலில் இருக்கும். அனைத்து ஆவணங்களும் டிஜிட்டலில் இருக்கும். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காகித பயன்பாடு இருக்காது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் முறைகளை போன்று ஒலி முறை களும் செயல்படும். ஒரு உறுப்பினர் பேசும்போது மற்றொருவர் குறுக்கிட இயலாது. உறுப்பினர் பேசுவதை பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்களுக்கு நேரடியாக கேட்கலாம். இது வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அமலாகும்" என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் வரும் பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக் கலாக உள்ளதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in