

புதுச்சேரியில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 3,420 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 45, காரைக்காலில் 13, மாஹேவில் 7, ஏனாமில் ஒருவர் என மொத்தம் 66 பேருக்கு (1.93 சதவீதம்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 619 ஆக அதிகரித் துள்ளது.
இதில் தற்போது மருத்துவ மனைகளில் 50 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 164 பேரும் என மொத்தமாக 214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 524 (98.38 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை சுகாதார பணியா ளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 14 லட்சத்து 10 ஆயிரத்து 815 தடுப்பூசிகள் (2-வது டோஸ் உட்பட) போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று ஒருநாள் பாதிப்பு 10-க்கும் குறைவாக இருந்த நிலையில், கடந்த 3 தினங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.