விஜோ ருத்லஸ்
விஜோ ருத்லஸ்

இளம் விஞ்ஞானி தேடல் போட்டி: பாம்பன் பள்ளி மாணவி முதலிடம்

Published on

மத்திய அரசின் வித்யார்த்தி விக்யான் மந்தன் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக, தேசிய அளவில் பள்ளி மாணவர்க ளிடையே இளம் அறிவியல் விஞ்ஞானி தேடலுக்கான போட்டித் தோ்வு நடத்தப் பட்டு வருகிறது.

கடந்த நவ.25-ல் நடந்த தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைன் மூலம் தேர்வு எழுதினர். இதில், ராமேசுவரம் நேஷனல் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த மீனவர் சூசை சந்தியாகுவின் மகளான விஜோருத்லஸ் (16) மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in