

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இவரது மனைவி நளினி 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், வேலூர் சிறை அதிகாரிகளிடம் முருகன் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கும், நளினிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனவே, தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை சிறைத்துறை தலைவருக்கு மத்திய சிறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.