Published : 02 Mar 2016 09:21 AM
Last Updated : 02 Mar 2016 09:21 AM

‘அமைய உள்ள திமுக ஆட்சிக்கு உங்கள் யோசனைகள் அவசியம்’: பிறந்தநாளில் தொண்டர்களை உற்சாகப்படுத்திய ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிறகு அமைய வுள்ள திமுக ஆட்சிக்கு உங்கள் யோசனைகள் அவசியம் என்று கட்சித்தொண்டர்களை தனது பிறந்த நாளன்று மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 64-வது பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தனது பிறந்த நாளை முன் னிட்டு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு:

நமக்கு நாமே பயணத்தின் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளை, பயண விவரங்களை திரட்டி ‘நமக்கு நாமே - அனுபவப் பதிவு’ என்ற பெயரில் திமுக தலைவரிடம் அளித்த போது, அது திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிக்கும் துணை நிற்கும் என்று அவர் கூறினார். இதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்?

‘நமக்கு நாமே’ பயணத்தின் போது, பதாகைகள் வைக்கக் கூடாது, வீண் விளம்பரங்கள் கூடாது என்று நான் சொன்னதை அப்படியே செய்தீர்கள். கட்சி சாயல் இல்லாத நிகழ்ச்சி என்பதால், உங்களின் வர வேற்பை ஏற்க முடியவில்லை. நமக்கு நாமே பயணம் வெற்றி பெற உதவிய தொண்டர்களுக்கு எனது நன்றியை காணிக்கை யாக்குகிறேன்.

திமுகவினரின் உழைப்பாலும், பொதுமக்களின் ஆதரவாலும் மீண்டும் திமுக ஆட்சி அமை யும்போது, இப்பயணத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உறுதியாக நிறை வேற்றப்படும். ‘நமக்கு நாமே’ பயணத்தின் வெற்றி எனது வெற்றியல்ல. உங்கள் ஒவ் வொருவரின் வெற்றியாகும். அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சிக்கு உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோ சனைகளையும் வழங்கிட வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு தொடர வுள்ள எனது பயணத்திலும் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.

தந்தையிடம் இன்று ஆசி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெறாமல் வெளியூர் சென்றிருந்தார். இதுகுறித்து திமுகவினரிடம் கேட்ட போது, “தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஒருவேளை அவர் சென்னையில் இருந்தால், கட்சிக்காரர்கள் அவரை சந்திக்க முயல்வார்கள் என்பதாலேயே அவர் வெளியூர் சென்றார். புதன்கிழமை அவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெறுவார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x