

உடுமலைப்பேட்டையில் சங்கர் என்னும் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சமீபத்தில் நடந்த படுகொலை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஆணவப் படுகொலை சமுதாயத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இச்சம்பவத்துக்கு காரணாமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி ஒரு போதும் தொடராமல் இருக்க சட்டத்திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
எனவே, பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் வகையில் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாகரீகமான சமுதாயத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.