3 நாட்கள் தடை நீங்கியதையடுத்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை நீங்கியதையடுத்து குற்றாலம் பேரருவியில் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை நீங்கியதையடுத்து குற்றாலம் பேரருவியில் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
Updated on
1 min read

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 3 நாட்கள் தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால், 3 நாட்களும் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, நேற்று காலையில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். இதனால், குற்றாலம் மீண்டும் களைகட்டியது. அனைத்து அருவிகளிலும் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in