

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர் காணல் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 6 நாள்கள் நடைபெற்ற நேர்காணலுக்கு பிப்ரவரி 28, 29, மார்ச் 1 ஆகிய 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கவிஞர் சல்மா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
இதுவரை 7 நாட்களில் 24 மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட் டங்களுக்கான நேர்காணல் இன்று நடக்கிறது.