Published : 29 Mar 2016 09:06 AM
Last Updated : 29 Mar 2016 09:06 AM

திமுகவிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்பது?- காங்கிரஸ் குழு தீவிர ஆலோசனை

திமுகவிடம் எந்தெந்த தொகுதிக ளைக் கேட்பது என்பது தொடர்பாக, காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத் தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கி ரஸ் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர் டி.யசோதா, மாநில துணைத் தலை வர் ஏபிசிவி சண்முகம் ஆகிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த 25-ம் தேதி சந்தித்துப் பேசினர். அப்போது, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்க, 25 தொகுதிகளுக்கு மேல் முடியாது திமுக தெரிவித்துள்ளது. கட்சி மேலிடத்திடம் இந்த தகவலை தெரிவித்துவிட்டு மீண்டும் வருவ தாக ஆசாத் கூறினார். பின்னர், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ஆசாத், தொகுதிப் பங்கீடு குழுவுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்பினார். டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கரு ணாநிதியுடன் பேசிய விவரங்களை தெரிவித்தார்.

இந்நிலையில், கருணாநிதியுடன் மீண்டும் ஆசாத் பேச்சு நடத்த இருப் பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது தொடர்பாக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடத்தி னர். இளங்கோவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தனுஷ் கோடி ஆதித்தன் தவிர மற்ற 7 பேரும் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் குறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘தொகுதிப் பங்கீட்டில் திமுக வுடன் எந்தப் பிரச்சினையும் வராது. இன்னும் ஓரிரு நாளில் காங்கி ரஸுக்கான தொகுதிகள் முடிவாகி விடும். காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகள் குறித்து தொகுதிப் பங்கீடு குழுவில் ஆலோசனை நடத்தினோம்’’ என்றார்.

இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

திமுக குறைந்தது 30 தொகுதி கள் தரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, 60 தொகுதிகளின் பட்டி யலை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 234 தொகுதிகளில் காங் கிரஸுக்கு சாதகமான 60 தொகுதிகளை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. சில தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகுதி களை பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தினர்.

32 வருவாய் மாவட்டங்களிலும் தொகுதிகளை தேர்வு செய்துள் ளோம். இதில் பெரும்பாலான தொகுதிகள் கடந்த 2011 தேர்தலில் திமுக ஒதுக்கிய தொகுதிகள். சென்னை மாவட்டத்தில் குறைந்தது 5 தொகுதிகளை பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x